சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு!

சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு! சீ்ன நாட்டில் காண்டன் நகருக்கு 500 மைல் வடக்கே சூவன்சசெள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர் .அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது . அது சீன பேரரசனான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.