என்னை மற்றும் இவ்வலைப்பதிவினைப்பற்றி
என்னை பற்றி
செந்தமிழ் மற்றும் பழந்தமிழரின் செம்மை, தொன்மை , பெருமைகளை மக்களிடம் கொண்டு சேற்பதே என் நோக்கம்.
என் பெயர் கே. நிரஞ்சனா, பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் நான் என் தாய்மொழியான தமிழ்மொழி மற்றும் அதனை தலைமுறைதலைமுறையாக கட்டிக்காத்த நம் பழந்தமிழர்களின் பெருமைகளையை , தமிழே நம் அடையாளம் என்பதனை மறந்துவிட்ட நம் இன்றைய தமழ் சமுதாயத்தினரின் விழப்புணர்வு பார்வைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக நான் எடுத்த சிறிய முயர்ச்சி தான் , இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவு.
இவ்வலைப்பதிவினால் ஆறிய கூடியவை ???
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான , தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்புகள் , அதன் பெருமைகள் , அதன் வியக்கதக்க வரலாறு, அதன் இனிமையான சொல்வளம் என பல கருத்துக்களையும் தகவல்களையும் இவ்வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்களின் , வாழ்வியல் முறைகள், பெருமைகள் , பண்புகள் , சாதனைகள் , ஆற்றல்கள், பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கும் இவ்வலைப்பதிவு மிக உதவியாக இருக்கும்.
"யாமரிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் கானோம் " - பாரதியார்
"செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே !
சேயளினை மூச்சினை உனக்களித்தேன்" - பாரதிதாசன்
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ்!!
Comments