Posts

Showing posts with the label பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையழுத்துப் பிரதிகளும்

பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையழுத்துப் பிரதிகளும்

Image
பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும்                           கையழுத்துப் பிரதிகளும் பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ( Bibliothque Nationale ) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டையக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப்பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,  சரளிப்புத்தகம் , புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் அங்கு உள்ளன.