முதல் தமிழ்க் கணினி
முதல் தமிழ்க் கணினி தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரோடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாக கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்த கணினி தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துரை அலுவலகத்திற்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் “திருவள்ளுவரே”!