Posts

Showing posts with the label போதிதர்மர்

போதிதர்மர்

Image
  போதிதர்மர்   கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துத்துச் சிற்றரசர் ஒருவர்   போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரி்வைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ ஜென்“ தத்துவம். இது , பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சி்லை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.