Posts

Showing posts from 2021

எத்திசையும் புகழ் மணக்க!!🚩🚩

Image
எத்திசையும் புகழ் மணக்க தமிழ் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும் . இது புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற  யூனியன் பிரதேசங்களின் உத்தியோகபூர்வ மொழிகளில்  ஒன்றாகும். சிங்கப்பூரின் உத்தியோகபூர்வ மற்றும் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்றாகும்.  சிங்களத்துடன் இலங்கையின் உத்தியோகபூர்வ மற்றும் தேசிய மொழிகளில் தமிழும் ஒன்று.   தமிழ்  ஒரு காலத்தில் இந்திய   மாநிலமான ஹரியானாவில் பெயரளவிலான உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது , இது பஞ்சாபிற்கு மறுப்பு என்று கூறப்படுகிறது , ஆனால் மாநிலத்தில் சான்றளிக்கப்பட்ட தமிழ் மொழி பேசும் மக்கள் யாரும் இல்லை , பின்னர் 2010 இல் பஞ்சாபியால் மாற்றப்பட்டது.   மலேசியாவில் , 543 ஆரம்ப கல்வி அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கிடைக்கின்றன. மியான்மரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமிழர்களுக்கு தமிழ்வழி கல்வி பள்ளிகளை நிறுவுவது ,முழுமையாக தமிழ் மொழியில் கல்வியை வழங்குவதற்கான திட்டம் செயல்பாட்டில் உள்ளது.   கனடாவின் சில உள்ளூர் பள்ளி வாரியங்கள் மற்றும் முக்கிய பல்கலைக்கழகங்க...

போதிதர்மர்

Image
  போதிதர்மர்   கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துத்துச் சிற்றரசர் ஒருவர்   போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரி்வைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ ஜென்“ தத்துவம். இது , பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சி்லை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கடல்கடந்த தமிழ் வணிகம்

Image
கடல்கடந்த தமிழ் வணிகம் ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்யாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று   கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்திய வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே. முசிறி துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு , மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரைச் சென்று சேருவது சம்பந்தமான ஒப்பந்தம் அது. அங்கு இருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக ரோம் நாட்டை அடைவதற்கு , வேறு ஓர் ஒப்பந்தம் இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.   இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளதால் , அந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்கு , கிரேக்க மொழி தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அன்றைய தமிழகத்தில் கிரேக்கம் தெரிந்தவர்கள் பலரும் இருந்...

பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையழுத்துப் பிரதிகளும்

Image
பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும்                           கையழுத்துப் பிரதிகளும் பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ( Bibliothque Nationale ) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டையக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப்பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,  சரளிப்புத்தகம் , புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் அங்கு உள்ளன.

சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு!

Image
          சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு!   சீ்ன நாட்டில் காண்டன் நகருக்கு 500 மைல் வடக்கே சூவன்சசெள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக   விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர் .அதன்   காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது . அது சீன பேரரசனான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாழை இலையில் விருந்து

Image
வாழை இலையில் விருந்து தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலானவை அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி , கீரை ,   கூட்டு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாக பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து , அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை பரிவுடன் பரிமாறுவர்.

ஏழு அடி நடந்து சென்று வழியனுபபினர்

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா

Image
    தாய்லாந்து மன்னரின்         முடிசூட்டு விழா தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருபவம்பாவை , திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.  

முதல் தமிழ்க் கணினி

Image
  முதல் தமிழ்க் கணினி தமிழ் மறையான திருக்குறளைத் தந்த   “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரோடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி   நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாக கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்த கணினி தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துரை அலுவலகத்திற்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் “திருவள்ளுவரே”!

கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ்

Image
  கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ் போர்த்துகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் , 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியல் தான் மொழி பெயர்க்க பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுளளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர். Carth ila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணஙகளில் (கறுப்பு , சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுளளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்மொழி தான் வாஸ்கோ டா காமா ஒரு போர்த்துகீசிய ஆய்வாளர் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் முதன்முதலில் 20 மே 1498 இல் காலிகட்டுக்கு அருகிலுள்ள கப்பாட்டில் இறங்கினார். அவர் வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசிய இந்தியாவை நிறுவுவதற்கான செயல்முறை தொடங்கியது. 1510 வாக்கில் கேரளாவில் செலவில் வலுவான பிடிப்பு இருந்தது மற்றும் கோவாவில் ஒரு நிரந்தர குடியேற்றம் இருந்தது. போர்த்துகீசிய இந்தியாவை ஸ்தாபித்தவுடன், ஜேசுயிட் மிஷனரிகள் தங்கள் கருத்துக்களைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். உள்...